நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.;

Update: 2025-10-27 12:49 GMT
2025-ஆம் ஆண்டிற்கான ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமானது Vigilance: Our Shared Responsibility” என்ற கருப்பொருளுடன் 27.10.2025 முதல் 02.11.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அனைத்து அலுவலகங்களிலும் நேர்மை உறுதி மொழியினை ஏற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியான,நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.” என்று அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வ.சந்தியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News