அத்திக்கடவு திட்டம் முழுமையடையவில்லை – புதிய திட்டம் கொண்டு வர வேண்டும்: அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு!

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயலிழப்பு, நெல் கொள்முதல் தோல்வி, திமுக ஊழல் குறித்தும் அன்புமணி கடும் விமர்சனம்.;

Update: 2025-10-28 06:22 GMT
கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் குளத்துப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் குளங்களுக்கு நீர் வரவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பா.ம.க தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் நேற்று அப்பகுதியை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், இதனை முழுமையாக்க தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நெல் கொள்முதல் விஷயத்தில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது என்று அவர் கூறினார். “தமிழ்நாட்டில் 4 கோடியே 80 லட்சம் டன் நெல் உற்பத்தியாகி இருக்கும் நிலையில், அரசு ஒரு கோடியே 70 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. மீதியை தனியார் துறையே வாங்கியுள்ளது” என்றார். அதேபோல், வெள்ளப் பாதிப்புகள், சுத்தம் செய்யாத கடைமடை பகுதிகள் மற்றும் ஊழல் குறித்தும் அவர் கடும் விமர்சனம் செய்தார். “நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எந்தத் திட்டங்களில் கொள்ளையடிக்கலாம் என திமுக அரசு திட்டமிடுகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை,” என்றும் குற்றம்சாட்டினார். அதனைத்துடன், வாக்காளர் திருத்தப் பணிகளை வரவேற்கிறேன், ஆனால் மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Similar News