கோவையில் துணை குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

துணை குடியரசு தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை புரிந்தார்.;

Update: 2025-10-28 07:05 GMT
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்த துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு விமான நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் வந்தடைந்த அவர், பூரண கும்ப மரியாதை அளித்த பெண்களிடம் தலை வணங்கி மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடந்து சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார். பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சி. பி. ராதாகிருஷ்ணன், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் இந்த தமிழ் மண்ணுக்கும் என் வணக்கங்கள். உங்களை மீண்டும் சந்திக்கிறேன்,” என தெரிவித்தார். பின்னர் அவர் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார்.

Similar News