கோவை: சிறுத்தை நடமாட்டம் - கூண்டு வைத்து நடவடிக்கை!
சிசிடிவியில் பதிவான சிறுத்தை நடமாட்டம் – அச்சத்தில் விவசாயிகள்.;
பொள்ளாச்சி அருகே குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியில் சிறுத்தையை கண்ட விவசாயி அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் வழங்கினார். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். மேலும், இரண்டு குழுக்களாக பிரிந்து சிறுத்தையின் அசைவுகளை கண்காணித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தையை விரைவில் பிடித்து, வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளூர் மக்கள் கோரியுள்ளனர்.