அரசு மணல் குவாரிகளில் ஆன்லைன் முறையில் மட்டுமே மணல் வழங்க வேண்டும் !-தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் கே.இராஜசேகர் நாமக்கல்லில் பேட்டி
ஆன்லைனில் மட்டுமே மணல் விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் சப்ளை செய்ய முடியும். தமிழகத்தின் அனைத்து குவாரிகளிலும் ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை அரசு செய்ய வேண்டும்.;
தமிழகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள அரசு மணல் குவாரிகளில், ஆன்லைன் முறையில் மணல் விற்பனை செய்தால் மட்டுமே பொதுமக்களுக்கு குறைவான விலையில் மணல் கிடைக்கும் என்றும் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களை கலந்தாலோசித்து மணலுக்கு அரசு, விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் கே. இராஜசேகர், நாமக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.நாமக்கல்லில் உள்ள, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் அலுவலகத்தில் அதன் மாநிலத் தலைவர் ராஜசேகர், பொருளாளர் பரமசிவம், இணை செயலாளர் சிவகுமார்,மற்றும் கரூர் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மணி,செயலாளர் பன்னீர், வெங்கடாசலம்,பரமத்திவேலூர் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.ஆர் தங்கவேல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. இராஜசேகர்..தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மணல் குவாரிகள் இயங்காத நிலையில் தற்போது அவற்றை இயக்க மாநில அரசும் துறை அமைச்சர்கள் அலுவலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் குவாரி அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வண்டி பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே நீதிமன்றத்தில் தடை ஆணை நீக்கப்பட்டதால் நீங்குள்ளதால் தமிழகத்தில் வெற்றிடங்களில் அரசு மணல் குவாரிகள் அமைக்கப்படுகின்றன.அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் நன்செய் இடையாறு, இராணிப்பேட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 8 குவாரிகள் வர உள்ளன. அவை அமைக்கப்படும் பட்சத்தில் ஆன்லைனில் புக்கிங் செய்து மணல் வழங்க வேண்டும் என்பதே லாரி உரிமையாளரின் கோரிக்கையாகும். ஏற்கனவே மணல் குவாரிகளில் இடைத்தரகர்கள் இருந்ததால் மணல் விற்பனையில் பிரச்னை ஏற்பட்டது. இடைத்தலைவர்களுக்கு மணல் விற்பனை உரிமத்தை அளிக்கக்கூடாது. ஆன்லைனில் மட்டுமே மணல் விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் சப்ளை செய்ய முடியும். தமிழகத்தின் அனைத்து குவாரிகளிலும் ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை அரசு செய்ய வேண்டும்.மணல் குவாரி இடைத்தரகர்கள் பாதை அமைக்கும் பணி காரணத்திற்காக இரவு நேரங்களில் மணல் அள்ளிக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. அதுபோன்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் முறைகேடுகள் நடக்கும் என்பதால் இதனை தடுக்க வேண்டும்.மணல் குவாரிக்கு விலை நிர்ணயம் செய்யும்போது, மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து பேசி, விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எம். சாண்ட் குறைவான விலையில் கிடைப்பதால், மணல் குறைவாக கொடுத்தால் மட்டுமே பொதுமக்கள் வாங்குவார்கள். எனவே விலை குறைவாகவும் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்ய வேண்டும். ஏற்கனவே, ஆன்லைனில் மணல் விற்பனை செய்ததில் இடைத்தரர்களால் பல குளறுபடிகள் இருந்தன. மணல் குவாரிகளில் லாரிக்கு உரிய எடை மட்டுமே மணல் ஏற்ற வேண்டும்.கடந்த 2 ஆண்டுகளில் நீதிமன்றத்தில் தடையாணை இருந்ததால் மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் 50 ஆயிரம் வண்டிகள் ஓடவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரம் மணல் லாரிகள் உள்ளன.தமிழ்நாடு அரசு, மணலுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லை என்றால், லாரி உரிமையாளர்கள், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம். மணல் குவாரிகளில் லாரிகளில் மணல் ஏற்றும் போது பர்மிட் டைம், தேவையான நேரத்தில் மணல் ஏற்றி இறக்குவதற்கு மணல் புக்கிங் நேரத்தை அரசு அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், மணி, கதிர்வேல், மணிக்குமார், செல்லப்பன்,மற்றும் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.