மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்.

இந்த கருத்தரங்கில் பிற மாநிலங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், பொறியியல் மாணவர்கள், அறிவியல் அறிஞர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-11-09 05:54 GMT
மஹேந்ரா பொறியியல் கல்லூரி ஏரோநாட்டிக்கல் துறை மற்றும் இந்திய பொறியாளர் அமைப்பு இணைந்து விண்வெளி தொழில்களில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கை கல்லூரி தலைவர் எம்.ஜி.பாரத்குமார் தலைமையில், வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கலையரங்கில் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு முனைவர். தமிழ்மணி, மேனாள் இயக்குனர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய அரசு கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில்...,
Advertisement
கிராமப்புற பகுதியில் செயல்பட்டு கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இது போன்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது மேலும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கொண்டு இன்றைய வானியல் துறையில் இயந்திரப் பராமரிப்பு, விமான வழித்தடங்கள், தொழில்நுட்ப பயன்பாடுகள், உற்பத்தி மேம்பாடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்
என்றும் இதில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் மற்றும் காம்பேக்ட் ஏர் டீம் சிஸ்டம் ஆகியவை செயற்கை நுண்ணறிவை விமான தொழில்நுட்பத்துடன் இணைத்து இதனுடைய தரவுகளை பகுப்பாய்வு செய்து ராணுவம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறது மேலும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விண்வெளி மற்றும் வானியல் துறைக்கு தன்னாட்சி அமைப்புகளை உருவாக்கி மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சமூக வளர்ச்சிக்கு உண்டான வகையில் மாற்றங்களை உருவாக்கி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கின்றனர் என்று பேசினார்.
இந்த கருத்தரங்கில் இயந்திரம் மற்றும் வானியல் துறை சார்பாக கலந்துரையாடல்கள், விவாதங்கள், திட்ட விளக்கம் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவை நடைபெற்றது. சிறந்த திட்ட விளக்கங்கள் மற்றும் விவாத கட்டுரைகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் பிற மாநிலங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், பொறியியல் மாணவர்கள், அறிவியல் அறிஞர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கில் இந்திய பொறியாளர் அமைப்பின் தேசிய தலைவர் வி. பி.சிங், பி.வி. வெங்கட கிருஷ்ணன், வி கார்த்திகேயன், சேலம் பிரிவு தலைவர் கே தங்கராசு, செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வர் எம் ரமேஷ், புல முதல்வர்கள் சண்முகம், நிர்மலா, இந்திய பொறியாளர் சேலம் அமைப்பின் செயலாளர் தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News