கடலூர்: இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
வங்கக் கடலில் வானிலை மாற்றம் காரணமாக அதிகமான காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் இன்று (டிசம்பர் 4) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.