பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.1 கோடி

பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.1 கோடி;

Update: 2025-05-28 03:21 GMT
பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.1 கோடி சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 1 கோடி செலுத்தி இருந்தனர். பண்ணாரி மாரியம்மன் சத்தியமங்கத்தின் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை, அமாவாசை,பொது விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவிலில் 20 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.மாதம்ஒரு முறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படும். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் கோவில் செயல் அலுவலர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் அருள்குமார், சத்தி அறநிலைய துறை ஆய்வாளர் சங்கர் கோமதி, பண்ணாரி கோவில் கண்காணிப்பாளர்கள் சங்கர். யோகலட்சுமி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 13 லட்சத்து 78 ஆயிரத்து 211 -யை செலுத்தி இருந்தனர். மேலும் 361 கிராம் தங்கமும், 2 ஆயி சரத்து 99 கிராம் வெள்ளியும் இருந்தது. வங்கி அலுவலர்கள். தன்னார்வலர்கள். சத்தியமங்க லம் வெற்றி நர்சிங் கல்லூரி மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News