தருமபுர ஆதீன மடத்திற்கு முன் 1நபர் உண்ணாவிரதம்
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திற்கு பதிலாக மாற்று இடம் தருவதாக கூறி திருப்பனந்தாள் ஸ்ரீ அருணஜடேஸ்வரர் ஆலயத்தின் செராப் மாற்று இடம் வழங்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறி இடத்தை தனக்கு வழங்க வேண்டி தருமபுர ஆதீன நுழைவு வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம்;
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலக்கா உக்கரை தத்துவாஞ்சேரியை சேர்ந்த பாஜகவின் ஆலயமேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளரான முதியவர் ராஜேந்திரன் என்பவர் தனக்கு வழங்கப்பட்ட கோயில் இடத்திற்கு பதிலா வேறு இடம் தருவதாக கூறி இடத்தை திரும்ப பெற்று இடம் வழங்காமல் செராப் ஏமாற்றுவதாக கூறி தருமபுரம் ஆதீனம் நுழைவுவாயில் அருகே அமர்ந்து ராஜேந்திரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன் கூறுகையில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஸ்ரீ அருணஜடேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான அம்மன் தேரடி அருகில் ஆயிரம் சதுரடி பரப்பளவில் உள்ள இடத்தை கோயில் அப்போதைய செராப் அகோரம்பிள்ளை என்பவர் தனக்கு கொடுத்தார். அதன் பின்னர் கோயில் செராப்பாக பதவிக்கு வந்த கந்தசாமி ராஜேந்திரன் வசமுள்ள இடம் கோயில் திருவிழா தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ளதால் மாற்று இடம் தருவதாக கூறியதன் பேரில் இடத்தை விட்டுக் கொடுத்தேன். ஆனால் மாற்று இடம் தராமல் அலைக்கழித்ததால் தருமபுர ஆதீனத்திடம் மனு அளித்ததன் பேரில் தன்னிடம் இடத்தை ஒப்படைக்க உத்தரவிட்டதை செராப் கந்தசாமி நடைமுறைப்படுத்தவில்லை. இதனை கண்டித்து ராஜேந்திரன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உண்ணாவிரதம் மேற்கொண்டார். வருவாய்துறையினர் பேச்சுவார்த்தையில் சுடுகாடு அருகே உள்ள இடத்தை தருவதாக கூறிய கந்தசாமி அந்த இடத்தையும் வழங்கவில்லை. தனக்கு தருவதாக சொன்ன இடத்தை கந்தசாமி வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய முயல்வதாகவும் தனது வயோதிக நிலையை கருத்தில் கொண்டு கந்தசாமியின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தனக்கு கொடுப்பதாக சொன்ன இடத்தை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரம் ஆதீனத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடபட்டுள்ளதாக தெரிவித்தார்.