வாணியம்பாடி அருகே சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் இருந்து 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

வாணியம்பாடி அருகே சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் இருந்து 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.;

Update: 2025-01-31 06:30 GMT
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் இருந்து 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல். காவல்துறையினரை கண்டதும், லாரி ஓட்டுநர் தப்பியோட்டம், மரத்தூள் ஏற்றிச்செல்வது போல் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் இன்று வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அப்பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் ஓட்டுநர் காவல்துறையினரை கண்டதும் தப்பியோடியுள்ளார், உடனடியாக சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் ஈச்சர் லாரியில் சோதனை மேற்க்கொண்டபோது, லாரியில் மரத்தூள் இருப்பது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து லாரி முழுவதும் காவல்துறையினர் சோதனை செய்த போது, லாரியில் வெளிமாநிலங்களுக்கு கடத்திச்செல்வதற்காக மரத்தூள் மூட்டைகளுடன் 10 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது, உடனடியாக 10 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் குடிமைப்பொருள் குற்றம்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட லாரி ஓட்டுநரை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் தேடி வருகின்றனர்... மேலும் லாரியில் மரத்தூள் ஏற்றிச்செல்வது போல் 10 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Similar News