கரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சிக்னல் ஏதுமின்றி நிறுத்திய தனியார் பேருந்து மீது, அரசு பேருந்து மோதி விபத்து. 10 பேர் படுகாயம்.
கரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சிக்னல் ஏதுமின்றி நிறுத்திய தனியார் பேருந்து மீது, அரசு பேருந்து மோதி விபத்து. 10 பேர் படுகாயம்.;
கரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சிக்னல் ஏதுமின்றி நிறுத்திய தனியார் பேருந்து மீது, அரசு பேருந்து மோதி விபத்து. 10 பேர் படுகாயம். திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையம்,5-வது தெருவை சேர்ந்த மகேஷ்பாபு மனைவி காவேரி வயது 51. இவர் கரூர்- கோவை செல்லும் அரசு பேருந்தில் மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு 2:30- மணி அளவில் பயணம் செய்து கொண்டு இருந்தார். இவரைப் போலவே கும்பகோணத்தைச் சேர்ந்த மாதவன் மனைவி சத்யா வயது 31, இவரது மகள் தனுஷ் ஸ்ரீ வயது 5, தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயராமன் மகள் அபிநயா வயது 16, சௌமியா வயது 25, சின்னையன் மனைவி லட்சுமி வயது 49, திண்டுக்கல்லை சேர்ந்த முனியசாமி மனைவி பழனிஜோதி, கோவையைச் சேர்ந்த ராம் பிரசாத் வயது 34, தஞ்சாவூரைச் சேர்ந்த குமார் வயது 56, திருப்பூரைச் சேர்ந்த அருண் வயது 32 ஆகியோர் பயணித்தனர். இந்த பேருந்து கரைப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே கருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 35 என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து, எவ்வித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி இருந்ததால், அரசு பேருந்து தனியார் பேருந்து பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மேலே கண்ட 10 பேரும் படுகாயம் அடைந்ததால், உடனே இவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்ச சம்பவம் தொடர்பாக காவேரி அளித்த புகாரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தனியார் பேருந்தை விபத்து ஏற்படும் வகையில் நிறுத்தி இருந்த முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.