ஓசூர் அருகே 10 கிலோ கஞ்சா கடத்திய 2 பேருக்கு காப்பு.
ஓசூர் அருகே 10 கிலோ கஞ்சா கடத்திய 2 பேருக்கு காப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஐதராபாத்திலிருந்து பெங்களூரு வழியாக கோவை சென்ற தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேரிடம் 10 கிலோ கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடடத்தியதில் அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த களிப்படா மண்டல் (33) மதன் மண்டல் (39) ஆகியோர் என்பது தெரியவந்ததின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.