மானாமதுரையில் 101 மில்லி மீட்டர் மழை பதிவு
மானாமதுரையில் 101 மில்லி மீட்டர் மழை பதிவானது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-24 16:24 GMT
மழை
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதும் 66,267 எக்டர் நில விவசாயிகள் நேரடியாகவும் மானாவாரியாகவும் நெல் நடவு செய்துள்ளனர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடப்பதால் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு திருப்தி தரும் விதத்தில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மானாமதுரையில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்