பகத்சிங் 119 வது பிறந்தநாள் நமது இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பனை விதை நடும் விழா
பகத்சிங் 119 வது பிறந்தநாள் நமது இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.;
அரியலூர் செப்.28- மாவீரன் பகத்சிங் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் பனை விதை நடுவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சுத்தமல்லி கிராமத்தில் செந்தமிழன் தலைமையில் பனைவிதை நடுவிழா நடைபெற்றது. இந்த பனைவிதை நடுவிழாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நடராஜன் துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில பொருளாளர் காரல்மார்க்ஸ் கலந்து இளைஞர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். இளைஞர் பெருமன்ற நிர்வாகி காத்தவராயன், தமிழ்மொழி மற்றும் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் திவாகர், தீபக், ஸ்ரீதர், ஜனார்த்தனன், ரித்தீஷ், மகிழன், சஞ்சய், தாமரைச்செல்வன் விஷ்ணு ஆகியோர் பனைவிதையை நட்டனர்.இறுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி துணைச் செயலாளர் தனசிங் ஆகியோர் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.