பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்த நாள் அமைச்சர் மரியாதை..

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்த நாள் அமைச்சர் மரியாதை..

Update: 2024-07-15 14:32 GMT
வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் (15.07.2024) அன்று நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், தேங்கல்பாளையம் அரசு நிதி உதவிபெறும் காந்தி கல்வி நிலையத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவர்கள் உடன் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ஏம். துரைசாமி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ரவீந்திரன், பள்ளி மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News