எதிர்வரும் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் .

ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உதகையில் கொண்டாட்டம் .;

Update: 2025-08-12 16:43 GMT
எதிர்வரும் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உதகையில் கொண்டாட்டம் . உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் திரையிடப்படும் போது அவருடைய ரசிகர்கள் அந்நாளை தீபாவளியாகவும் பொங்கலாகவும் கொண்டாடி வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி திரைப்படம் திரையிடப்படுகிறது இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் எதிர் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவரும் கூலி திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் எனஉதகையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம். அதனைத் தொடர்ந்து உதகையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ரஜினி ரசிகர் மன்றத்தார்கள் இணைந்து கூலி திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்

Similar News