வினோத வழிபாடு 140 வருடங்களாக காமன்கோவில் காமதகனம்
சின்னாளபட்டியில் வினோத வழிபாடு 140 வருடங்களாக காமன்கோவில் காமதகனம் நடைபெற்றது;

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது காமயசுவாமி திருக்கோவில் ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவிலின் உப கோவிலான ஸ்ரீ காமயசாமி கோவிலில்140 வருடங்களாக அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வழிபாடு செய்து விழாவை கொண்டாடி வருகின்றனர். இவ்வருடம் விழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 2ம் தேதி பிருந்தாவனத் தோப்பிலிருந்து காமயசுவாமியை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். கரும்பு, அரச இலை, மா இலை, கொட்டமுத்து இலை, பூக்களை ஒன்றாக சேர்த்து காமயசுவாமியை அலங்காரம் செய்திருந்தனர். பின்னர் வானில் மூன்றாம் பிறை பார்த்த பின்பு கோவிலுக்கு காமையசுவாமியை அழைத்து வந்தனர். அதன்பின்னர் சுவாமி ஊன்றப்பட்டவுடன் தினசரி கட்டளைதாரர்கள் வழிபாடு செய்தனர். விழா நிறைவாக காமதகனம் நடைபெற்றது. காமன் மார்பில் ரதி மன்மதன் படங்கள் வைக்கப்பட்டு வழிபாடு செய்த பின்பு காமதகனம் நடைபெற்றது. காமையசுவாமி நெருப்பில் எரியும் போது நேர்த்திக்கடனுக்காக உப்பு மிளகு போட்டு வழிபாடு செய்தனர். அதன்பின்னர். பெரிய திருநங்கை மூலம் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு மொச்சைபயிர் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜமீன்தார் முத்துக்குமார் மற்றும் விழா கமிட்டி தலைவர் சிவ.முருகேசன், செயலாளர் ராஜா பொருளாளர் சுப்பையா, உதவி தலைவர்கள் ராகவன் ,மார்க்கம்பட்டி முருகன் உதவி செயலாளர்கள் தியாகராஜன், பிரசன்னா, அழகேசன், சீனிவாசன், ராம்குமார், வினோத்சாரதி கௌரவ ஆலோசகர்கள் பொன்ராஜ். ராமகிருஷ்ணன், குணசேகரன், குருசாமி மோகன், கன்னியப்பன், இரவிச்சந்திரன், ராஜாராம் தலைமையிலான விழாக் கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.