ராஜாவாய்க்காலுக்கு நாளை முதல் 15-ந் தேதி வரை தண்ணீர் நிறுத்தம்.

ஜேடர்பாளையம் தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்ராஜாவாய்க்காலுக்கு நாளை முதல் 15-ந் தேதி வரை தண்ணீர் நிறுத்தம் அதிகாரிகள் தகவல்.;

Update: 2025-02-21 13:44 GMT
பரமத்திவேலூர், பிப்.21: பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பாசனத்திற்காக ராஜா (வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் துணை வாய்க்கால்களான பொய்யேரி,கொமாரபாளை யம், மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால்களுக்கும் பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வாய்க்கால்களில் வரும் தண்ணீர் மூலம் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு பண பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள்மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டு தோறும் 15 நாட்களுக்கு வாய்க்கால்க ளில் தண்ணீரை நிறுத்தி பணிகள் மேற்கொள்ளப்படு வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ராஜா வாய்க்கால் உள்ளிட்ட 4 வாய்க்கால்களிலும் தண்ணீரை நிறுத்தி வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நாளை 22-ந் தேதியிலிருந்து மார்ச் 15-ந் தேதி வரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவதை 22 தினங்களுக்கு நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 16-ந் தேதி காலை பாசனத்திற்காக ஜேடர்பாளையம் தடுப்பணையி லிருந்து ராஜா வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Similar News