அரியலூர் அருகே பொதுப்பாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் என 150 பேர் கைது.
அரியலூர் அருகே பொது பாதையை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் கட்சி மற்றும் பொதுமக்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட காவல் துறைக்கு வலியுறுத்தியுள்ளது..;
அரியலூர், அக்.3- அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப் பிரிங்கியம் பாலக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் மூன்று தலைமுறைகளாக பாலக்கரை கிராமத்திற்கு செல்வதற்காக பொதுப் பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை தனிநபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்வதில் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் பொதுப் பாதையை மீட்டுத் தரக் கூறி பல கட்ட போராட்டங்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும், திருச்சி பதிப்பு தீட்டதிர் பொறுப்பாளருமான ஐ வி நாகராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, கே.கிருஷ்ணன், மூத்த தலைவர் சிற்றம்பலம், ஒன்றிய செயலாளர்கள் அ. அருண்பாண்டியன், எஸ்.பி.துரைசாமி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பொதுபாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பொதுப்பாதையை மீட்க முயற்சித்த போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொதுப் பாதையை ஆக்கிரமித்தவர் கல்வீசி தாக்கியதிலும், போலீசார் தாக்கியதிலும் என பாலக்கரை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி சித்ரா, பாலு மனைவி ஆனந்தவள்ளி மதியழகன் மகன் மங்கள ராஜா உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் தனிநபர் ஆக்கிரமித்து வேலி அமைத்து இருந்த பொது பாதையை பொதுமக்கள் மீட்டனர். இதனையடுத்து மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என 150 -க்கும் மேற்பட்டோரை போலிசார் கண்மூடித்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்கியதுடன், பலவந்தமாகவும், குண்டுகட்டாகவும் தூக்கி கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது - இதுகுறித்து தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினரும், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளருமான ஐ. வி நாகராஜன் கூறும்போது :- நியாயமான போராட்டத்தை மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கலவரத்தை ஏற்படுத்தி சீர்குலைக்கு முயற்சித்துள்ளார் இவர் மீது மாவட்ட காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்ரா, ஆனந்தவற்றி மங்கள ராஜா உள்ளிட்ட 3 பேருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மீட்கப்பட்ட பொது பாதையை முறையாக பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வருவாய் துறையும் காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார் - மேலும் தனி நபருக்கு ஆதரவாக வருவாய் துறையினர் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.