நாமக்கல்லில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி! 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று விதவிதமான யோகாசனங்களை செய்து அசத்தினர்!
நாமக்கல் மாவட்டத்திலிருந்து பொது மற்றும் சிறப்பு பிரிவில் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, யோகாசனங்களை செய்தனர். இதில் கால பைரவர் ஆசனம், அகர்ண தனுராசனம், சலபாசனம், கண்ட பின்டாசனம் அஞ்சலி ஆசனம் போன்ற பல்வேறு ஆசனங்கள் செய்யப்பட்டன.;
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான யோகாசன நிகழ்ச்சிகள் தங்களுக்கு பெரும் புத்துணர்வை அளித்துள்ளதாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடைதான் யோகா பயிற்சிகள். நமது நாட்டில் தோன்றிய யோகாசனங்களை, உலகம் முழுவதும் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர்.ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.'மேலும் அவ்வப்போது பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே யோகாசன போட்டிகளை பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு தொழில் முறை தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர் நலச்சங்கம் மாவட்டக் கிளை சார்பில், நாமக்கல்லில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன போட்டி நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து பொது மற்றும் சிறப்பு பிரிவில் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, யோகாசனங்களை செய்தனர். இதில் கால பைரவர் ஆசனம், அகர்ண தனுராசனம், சலபாசனம், கண்ட பின்டாசனம் அஞ்சலி ஆசனம் போன்ற பல்வேறு ஆசனங்கள் செய்யப்பட்டன. சிறந்த முறையில் யோகாசன பயிற்சிகளை செய்த மாணவ - மாணவிகளுக்கு கோப்பைகள், பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. தினந்தோறும், யோகாசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் பணிகளை மேற்கொள்ள முடிகிறது என்றும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் , பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தொழில் முறை தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.