நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட காத்திருப்பு வளாகத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் திறந்து வைத்தார்
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட காத்திருப்பு வளாகத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் திறந்து வைத்தார்;
விருதுநகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட காத்திருப்பு வளாகத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் திறந்து வைத்தார் ... விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொது மக்களின் வசதிக்காக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பொது காத்திருப்பு வளாகத்தைவிருது நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் வசதிக்காக திறந்து வைத்தார் . மேலும் இந்த நிகழ்வில் நகர் மன்ற தலைவர் எஸ். ஆர் .எஸ்.ஆர்.மாதவன், நகர்மன்ற துணை தலைவர் தனலட்சுமி துளசிராம், 14 வது வார்டு உறுப்பினர் ராஜ்குமார்,நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ், உதவி பொறியாளர் பரஞ்சோதி ,ஒப்பந்ததாரர் தாமரைச்செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்