கடையத்தில் பிப். 16ல் விசிகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

16ம் தேதி விசிகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-13 08:49 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே கடையத்தில் வைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றியம் சார்பில் வேங்கை வயல் வழக்கில் நீதி விசாரணை வேண்டியும், அழிவை நோக்கி செல்லும் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடையம் சின்னத் தேர் திடலில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி பொறுப்பாளர், ஒன்றியம் செயலாளர், நகரம் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஒன்றிய செயலாளர் அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

Similar News