கலவை அருகே 17 சவரன் நகை, பணம் திருட்டு!

17 சவரன் நகை, பணம் திருட்டு!;

Update: 2025-06-17 04:46 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் விவசாயி முருகன் என்பவரின் வீட்டில் மர்மநபர்கள் பீரோவை உடைத்து 17 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச்சென்றனர். சம்பவம் நேற்று வாலாஜா அருகே நடந்தது. வாழைப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குற்றவாளிகள் யார் என தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Similar News