ஜலகண்டாபுரத்தில் ரூ.18 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
விவசாயிகள் மகிழ்ச்சி;
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க உப கிளை ஜலகண்டாபுரத்தில் இயங்கி வருகிறது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இங்கு கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், பூலாம்பட்டி, சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, வனவாசி, பெருந்துறை, நரியம்பட்டி, சின்னானூர், வாத்திப்பட்டி, ஊத்துக்குளி, முத்தூர், விஜயமங்கலம், வாழப்பாடி, அந்தியூர், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்துக்கு கொண்டு வருவார்கள். நேற்று நடந்த ஏலத்தில், 211 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு வந்தது. இதில் தேங்காய் பருப்பு முதல்தரம் கிலோ ரூ.185.25 முதல் ரூ.213.10 வரையும் இரண்டாம் தரம் கிலோ ரூ.120.10 முதல் ரூ.180.95 வரை விற்பனையானது. நேற்றைய ஏலத்தில் ரூ.18.11 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.