நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் ச

அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது;

Update: 2025-08-14 16:32 GMT
"நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக் கோட்டம், கூடலூா் வனக் கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை உள்ளன. இதில் நீலகிரி வனக் கோட்டத்தில் தெற்கு, உதகை வடக்கு, குன்னூா், கோத்தகிரி, குந்தா, கோரக்குந்தா, கட்டப்பெட்டு, கீழ்கோத்தகிரி, நடுவட்டம், பைக்காரா, பாா்சன்ஸ்வேலி, கவா்னா்சோலை ஆகிய 12 வனச் சரகங்களும், கூடலூா் வனக் கோட்டத்தில் கூடலூா், ஓவேலி, நாடுகாணி, பிதா்காடு, சேரம்பாடி, பந்தலூா் ஆகிய 6 வனச் சரகங்களும், முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுமலை காா்குடி, தெப்பக்காடு, சீகூா், சிங்காரா, வடகிழக்குசரிவு வனச் சரகம், மசினகுடி, நெலாக்கோட்டை ஆகிய 8 வனச் சரகங்களும், முக்குருத்தி தேசியப்பூங்காவில் முக்கூா்த்தி வனச் சரகமும் உள்ளன. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக் கோட்டம், கூடலூா் வனக் கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம் , முக்குறுத்தி தேசியப் பூங்கா வனப் பகுதி மொத்தம் 1,417 சதுர கிலோமீட்டா் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து மனிதா்களைத் தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க யானைகள் வரும்போது ஒலி எழுப்பும் வகையில் எச்சரிக்கை ஒலி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல ஊருக்குள் வரும் யானைகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறிந்து வனத் துறையினா் அவற்றை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனா். ஆனால், யானைகள் குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவுவதை முழுவதும் தடுக்க முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களில், கூடலூா் வனக்கோட்டத்தில் யானை தாக்கி 3 போ் உயிரிழந்துள்ளனா். மனித -விலங்கு மோதலை தடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தநிலையில், நீலகிரி வனகோட்டம், முதுமலை புலிகள் காப்பக மண்டலத்தில் பொது மக்களின் வன விலங்கு தொடா்பான குறைகளை உடனுக்குடன் தீா்க்க வனத் துறை சாா்பில் அவசர கால உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமை செயலாளா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளா் ராகேஷ்குமாா் டோக்ரா, முதுமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் கிருபாஷங்கா், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட வன அலுவலா் கௌதம் முன்னிலையில் நீலகிரி வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எண் 24 மணி நேரமும் செயல்படும். எனவே, பொது மக்கள் அனைவரும் வன விலங்கு குறித்த தகவலை இந்த எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Similar News