சேலம் கன்னங்குறிச்சி போலீசார் ஏரிக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது குட்கா பதுக்கி விற்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கடைக்காரர் சண்முகபிரியன் (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் கோரிமேடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற குமரேசன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.