அக்டோபர் 2 ஆம் தேதி வரை ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் கலந்து கொள்ள ஆணையர் அழைப்பு

அக்டோபர் இரண்டாம் தேதி வரை ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் நகராட்சியில் நடைபெறுகிறது முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு வியாபாரிகளுக்கு ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2025-09-26 14:15 GMT
அரியலூர், செப்.26- ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அக் 2-ந்தேதி வரை வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் முகாம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் முதல் முறையாக ரூ.15,000/- இரண்டாவது முறையாக ரூ.25.000/- மூன்றவாது முறையாக ரூ. 50.000/- வரை பெறலாம். மேலும், இதற்கு முன்னர் வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகளும் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு வரும் சாலையோர வியாபாரிகள் நகராட்சியால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் கொண்டு வர வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு குறித்து நடைபெறும் விழிப்புணர்வு பயிற்சியிலும் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News