சூலூரில் கஞ்சா விற்பனைக்கு முயன்ற 2 பேர் கைது !

பப்பம்பட்டி பிரிவு அருகே போலீசார் கண்காணிப்பில் சிக்கிய இருவர் கைது.;

Update: 2025-10-27 11:22 GMT
சூலூர் போலீசார் நடத்திய சோதனையில் 500 கிராம் கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சூலூர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் பப்பம்பட்டி பிரிவு அருகே நடைபெற்ற சோதனையில், சந்தேகத்திற்கிடமாக இருந்த ரோஹன் @ ஜஸ்டின் (25), மணிகண்டன் (25) ஆகிய இருவரும் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் முன்பும் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இருவரும் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Similar News