ஆம்பூரில் 20 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் மின்சாரத்துறையை கண்டித்து மின்சார டிரான்ஸ்பார்மர் கீழ் போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள்

ஆம்பூரில் 20 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் மின்சாரத்துறையை கண்டித்து மின்சார டிரான்ஸ்பார்மர் கீழ் போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள்;

Update: 2025-04-05 13:12 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 20 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் மின்சாரத்துறையை கண்டித்து மின்சார டிரான்ஸ்பார்மர் கீழ் போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஜவஹர்லால் நேரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் போது, இப்பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்போர்மர் திடீரென பழுதானது, அதனை தொடர்ந்து இப்பகுதியில் கடந்த 20 மணி நேரத்திற்க்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகி வந்த நிலையில், இதுகுறித்து தேவலாபுரம் மின்சாரத்துறையினருக்கு தகவல் அளித்தும், மின்சாரத்துறையினர் இதுவரையில் பழுதடைந்த மின்சார டிரான்ஸ்பார்மரை சரிசெய்யவில்லையெனவும், தேர்வும் எழுதும் மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்க்குள்ளாகுவதாகவும், மேலும் இப்பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்போர்மர் அடிகடி பழுதாகுவதாகவும், புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை மாற்றித்தரக்கோரியும் ஜவஹர்லால் நகர் பகுதியை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் , மின்சாரத்துறையை கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்..

Similar News