ஜெயங்கொண்டத்தில் ஜிஎஸ்டி 2.0 அமுல் படுத்தியதற்கு நன்றியை தெரிவிக்கும் மற்றும் ஜிஎஸ்டி 2.0 குறித்த விளக்கப் பொதுக்கூட்டம்

கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க அரசின் தோல்வியே காரணம் என பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் குமரகுரு குற்றம் சாட்டினார்;

Update: 2025-10-01 13:25 GMT
அரியலூர், அக்.1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜிஎஸ்டி 2.0 அமுல் படுத்தியதற்கு  நன்றியை தெரிவிக்கும் மற்றும் ஜிஎஸ்டி 2.0 குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் பாஜக சார்பில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர்கள் மருது சுப்ரமணியம், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக நகரத் தலைவர் வரதராஜன் வரவேற்று பேசினார். .கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர்  குமரகுரு சிறப்புரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சமூக ஊடகப் பிரிவு சக்திவேல், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஆனந்த், இளைஞரணி மாவட்ட தலைவர் ஷாருஹாசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் குமரகுரு கலந்துகொண்டு ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை குறித்து பேசினார் அப்போது ஜிஎஸ்டியில் பெரும்பளவில் வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அனைத்து விதமான பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பொருட்கள், உயிர்காக்கும் மருந்து பொருட்கள், கட்டுமான பொருட்கள், விவசாயிகளுக்கான இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் அனைத்து பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை காரணம் கடந்த 11 ஆண்டுகளில் மக்கள் நலன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து உள்ளதாகவும் பெருமிதத்துடன் பேசினார் கூட்டத்தில் பாஜகவின்  மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் குமரகுரு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் படி ஜிஎஸ்டி 2.0வில் மாபெரும் வரி சீர்திருத்தம்  செய்யப்பட்டுள்ளது இது குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பாஜக சார்பில் ஒரு மாதத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என கூறினார் தமிழகத்தில் எங்கெங்கு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்துகின்றனவோ அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்  போகிறது. இதை ஏன் என்று ஒருத்தர் கூட கேட்கவில்லை கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தால் அதற்கு காரணம் போலீசா கூட்டம் நடத்துபவர்களா என கேள்வி எழுப்பினார் கூட்டம் நடத்த அனுமதி வழங்க மூன்று நாள் அவகாசம் போலீசார் எடுத்துக் கொள்கிறார்கள்  இடத்தை பார்த்து ஆய்வு செய்வதற்காக தான். ஆம்புலன்ஸ் வரலாம் தகராறு வரும் பிரச்சனை வரும் இதையெல்லாம் கருத்தில் கொண்டு தானே போலீசார் அனுமதி கொடுப்பார்கள் விஜய் பிரச்சாரத்தின் போது வரக்கூடிய ஆம்புலன்ஸ் அனைத்தையும் கூட்டத்திற்குள் விடுகிறார்கள் ஏற்கனவே அதிக அளவில் கூட்டம் இருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ் உள்ளே வந்தால் அதிக அளவில் நெரிசல் தானே வரும். கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க அரசின் தோல்வியே காரணம். அதற்காக கூட்டம் நடத்தினவர்களை அரசு கைது பண்ண வேண்டும் கூட்டத்தை ஏற்பாடு பண்ணியவர்களை அரெஸ்ட் பண்ணனும் என்பது திசை திருப்பும் வேலையாகும் கரூர் சம்பவத்தில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மன உளைச்சலோடு துபாயிலிருந்து தனி விபானத்தில் வந்து கதறி கதறி அழுது மீண்டும் துபாய்க்கு செல்லும் நிலையில் தமிழகம் உள்ளது உயர்நீதவர்களை பார்க்க வந்தவர் ஏன் உடனே துபாய் செல்ல வேண்டும் என்பது குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை இவர்கள்தான் பிரதமர் மோடி ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என கேட்டவர்கள் என குற்றம் சாட்டினார்.

Similar News