செங்குணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோடை விடுமுறைக்கு பின் 2025 சூன்-2 இன்று மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள்
2020 டிசம்பர்-31 ஆம் தேதி அன்று வரை பிறந்த அனைவரும் முதல் வகுப்பில் சேரலாம் என தலைமை ஆசிரியர் அமுதா தகவல் தெரிவித்துள்ளார்;
பெரம்பலூர் வட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோடை விடுமுறைக்கு பின் 2025 சூன்-2 இன்று மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டன. மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் வே.அமுதா தலைமையில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் அருள்செல்வி, மைனாவதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனிதா மற்றும் குமார் அய்யாவு உடனிருந்தனர். மேலும் 2020 டிசம்பர்-31 ஆம் தேதி அன்று வரை பிறந்த அனைவரும் முதல் வகுப்பில் சேரலாம் என தலைமை ஆசிரியர் அமுதா தகவல் தெரிவித்துள்ளார்