தெருநாய் கடித்ததில் 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
விபத்து செய்திகள்;
அறந்தாங்கி, விக்னேஷ்வரபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கபள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிய போது பள்ளிக்குள் நுழைந்த தெருநாய் கடித்ததில் அனுஸ்கா (8), பார்த்தசாரதி (7), சுயபிரியன் (9) ஆகிய 3 பேர் காயமடைந்து அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது