வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 345 பயனாளிகளுக்கு ரூ.12.08 கோடி மதிப்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 345 பயனாளிகளுக்கு ரூ.12.08 கோடி மதிப்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

Update: 2024-07-15 15:10 GMT
வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 345 பயனாளிகளுக்கு ரூ.12.08 கோடி மதிப்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் (15.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் தலைமையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் முன்னிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 345 பயனாளிகளுக்கு ரூ.12.08 கோடி மதிப்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வீடுகள் இல்லாத ஏழை எளியோர் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை கடந்த 11.07.2024 அன்று மக்களுடன் முதல்வர் இரண்டாம் கட்ட துவக்க விழாவில் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 4,756 பயனாளிகள் கண்டறியப்பட்டு இதில் 2,555 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத்தின் கீழ் ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணந்தகவுண்டம்பாளையம், அக்கரைப்பட்டி, ஆலாம்பட்டி உள்ளிட்ட 18 ஊராட்சிகளை சேர்ந்த 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலும், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாளையம், அரசபாளையம், குருக்கபுரம், காக்காவேரி உள்ளிட்ட 19 ஊராட்சிகளை சேர்ந்த 95 பயனாளிகளுக்கு ரூ.3.33 கோடி மதிப்பிலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், முள்ளுகுறிச்சி உள்ளிட்ட 16 ஊராட்சிகளை சேர்ந்த 188 பயனாளிகளுக்கு ரூ.6.58 கோடி மதிப்பில் என மொத்தம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 345 பயனாளிகளுக்கு ரூ.12.08 கோடி மதிப்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மீதமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேரடியாக சென்று பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகளை வழங்க உள்ளோம் என வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற நாள் முதல் ஓய்வின்றி ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்கள். அதற்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறார்கள். குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட தமிழ்நாட்டில் வாழும் அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வருகின்றார். "குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை எய்திடும் வகையில் முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் அறிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் முறையாக கணெக்கடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 4756 பயனாளிகள் கண்டறியப்பட்டு இதில் 2,555 பயனாளிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதில் 2,267 பட்டா உள்ளவர்கள், 233 பட்டா இல்லாதவர்கள் மற்றும் 55 கூட்டுப் பட்டா உள்ளவர்கள். இவர்களில் முதல் கட்டமாக 2,267 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. இதில் இன்றையதினம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலும், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 156 பயனாளிகளுக்கு ரூ.5.36 கோடி மதிப்பிலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 423 பயனாளிகளுக்கு ரூ.14.80 கோடி மதிப்பில் என மொத்தம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 638 பயனாளிகளுக்கு ரூ.22.33 கோடி மதிப்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகளை வழங்கப்படுகிறது. வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை நேரடியாகச் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கூடுதலாக பயனாளிகள் விரும்பினால் வங்கிகள் வாயிலாக ரூபாய் ஒரு இலட்சம் வரை கடனுதவியாக பெற்றுக் கொள்ளலாம். விரைவில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.பி.ஜெகநாதன் (இராசிபுரம்), திருமதி பி.தங்கம்மாள் (வெண்ணந்தூர்), மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News