சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 350 கன அடி நீர் திறப்பு

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 350 கன அடி நீர் திறப்பு;

Update: 2025-03-29 16:34 GMT
  • whatsapp icon
திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 350 கன அடி நீர் திறப்பு. நீர் வள ஆதாரத் துறையினர் நடவடிக்கை. சென்னை நகர மக்களுக்காக வகுக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தெலுங்கு கங்கை ஒப்பந்த பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி அணைக்கு திறந்து விட வேண்டும். கோடை வெயில் காரணமாக பூண்டி அணை மட்டுமின்றி புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டது. இதனால் பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் திறந்து விடுவது பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் தமிழக பொதுப்பணித்துறையினர் ஆந்திர மாநில பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதி தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்தனர் அதன்படி அம்மாநில பொதுப்பணி துறையினர் கடந்த திங்கட்கிழமை தண்ணீரை திறந்து விட்டனர் கிருஷ்ணா நதி நீரானது சாய் கால் வாயில் 152 கிலோ மீட்டர் பயணித்து நேற்று தமிழக ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வந்தடைந்தது இரு மாநில பொதுப்பணித்துறையினர் மலர் தூவி தண்ணீரை வரவேற்ற நிலையில் இன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 20 கன அடி வீதம் தண்ணீர் வந்து நிரம்புகிறது இதனை அடுத்து பூண்டி அணையில் சேகரமாகியுள்ள தண்ணீரை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 350 கன அடி வீதம் பொதுப்பணித்துறையினர் திறந்து வெளியேற்றி வருகின்றனர் தொடர்ந்து செம்பரம்பாக்கம் சோழவரம், பூண்டி கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் தண்ணீரை தேக்கி வருகின்ற கோடை காலத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கைகளை நிர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்

Similar News