காவல் நிலையம் முன்பு மோதல் 4 பெண்கள் கைது
அதியமான்கோட்டை காவல் நிலையம் முன்பு இரு தரப்பினர் மோதல் 4 பெண்கள் கைது;
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் குடும்ப பிரச்சனை தொடர்பாக அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இருதரப்பினரும் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்தனர். பின்னர் அவர்களிடம் தனித்தனியாக காவலர்கள் விசாரணை செய்த போது, காவலர்கள் முன்னிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆபாச வார்த்தைகளால் பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக இரு தரப்பை சேர்ந்த பெண்கள் மீது காவலர்கள் நேற்று வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்