ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தில் 4 பேருக்கு 32" எல்இடி டிவி பம்பர் பரிசு 

ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தில் 4 பேருக்கு 32" எல்இடி டிவி பம்பர் பரிசு  வழங்கப்பட்டது.;

Update: 2025-10-06 15:35 GMT
அரியலூர், அக்.7- ஜெயங்கொண்டம் பஸ் நிலையம்  அருகில் இயங்கி வரும் ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தில் ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்த 4 பேருக்கு  32 இன்ச் எல்இடி டிவி பம்பர் பரிசு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தின் அடையாளமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் சிறப்பாக செயல்பட்டு 25 ஆம் ஆண்டு வெற்றி விழா கண்டு மாபெரும் ஜவுளி சாம்ராஜ்யமாக ஸ்ரீகண்ணன் சில்க்ஸ் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இதில் நவ நாகரிக உடைகள் அதிசயத்தக்க டிசைனில் தரமான ஜவுளிகளை குறைந்த விலையில்  விற்பனை செய்து வாடிக்கையாளர்களையும், பொதுமக்களையும் திருப்திப்படுத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் தனது துணை நிறுவனமாக ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் புதிதாக கே மார்ட் ஜவுளி நிறுவனம் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது மலிவான விலையில் தரமான ஜவுளிகளை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் கே மார்டில் எண்ணற்ற ரகங்களில் கண்ணை கவரும் வண்ணங்களில் மலை போல் ஜவுளிகளை குவித்து வைத்து விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு தேவையான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளை ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கி செல்கின்றனர். திறப்பு விழா மற்றும் தீபாவளி பண்டிகைக்காக ரூ 500 முதல் 10 ஆயிரம் வரை ஜவுளி எடுக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அன்னக்கூடை, வாலி, ஹாட்பாக்ஸ், குக்கர், சில்வர்குக்கர் என  ஏராளமான அன்பு பரிசுகளை வாரி வழங்குகி வருகின்றனர். அதேபோல் ஸ்ரீகண்ணன் சில்க்ஸில் ஆடவர், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி பிரிவில் எண்ணற்ற டிசைன்கள், ஏராளமான கலெக்ஷன்களில் வண்ண வண்ண ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் ஆடைகள் ஏராளமாக குவித்தும் வைத்துள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகைக்காக பிரத்யேகமான டிசைன்களில்  வண்ண வண்ண ஜவுளிகள் மற்றும் ரெடிமேடு ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை  பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து எதை எடுப்பது எதை விடுவது என தெரியாமல்  தேவையானவற்றை தேர்வு செய்து ஜவுளிகளுடன்  அழகான பரிசு பொருட்களையும் வாங்கி வருகின்றனர். ஸ்ரீகண்ணன் சில்க்ஸில் 25 ஆம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில்   பம்பர் பரிசாக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினம் தினம் குலுக்கல் முறையில்  3 ஆயிரத்துக்கும் மேல் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒருவரை  தேர்வு செய்து அன்பு பரிசாக 32 இன்ச் எல்இடி டிவி வழங்கப்படுகிறது அந்த வகையில் ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் உரிமையாளர் நந்தகுமார்  முதல் நாள் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவருக்கும் , இரண்டாம் நாள் பொன்பரப்பியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும், மூன்றாம் நாள் கண்டமங்கலத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவருக்கும், நான்காம் நாளாக வான திரையன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் என நான்கு பேருக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து  32" எல்இடி டிவி வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக ஜவுளிகள் மற்றும் எல்இடி டிவி வாங்க வேண்டும் என ஆசைப்படும் பொதுமக்கள் ஸ்ரீ கண்ணன் சில்க்ஸில் 3000த்துக்கு மேல் ஜவுளிகள் எடுத்து குலுக்கள் முறையில் எல்இடி டிவி வழங்குவது எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை

Similar News