அம்மாபட்டி-சட்ட விரோத சேவல் சண்டை நடத்திய 5- பேர் கைது.5 டூவீலர்கள், 9- கத்திகள்,4- சேவல்கள் ரூபாய் 11,220 பறிமுதல்.

அம்மாபட்டி-சட்ட விரோத சேவல் சண்டை நடத்திய 5- பேர் கைது.5 டூவீலர்கள், 9- கத்திகள்,4- சேவல்கள் ரூபாய் 11,220 பறிமுதல்.;

Update: 2025-03-29 13:11 GMT
  • whatsapp icon
அம்மாபட்டி-சட்ட விரோத சேவல் சண்டை நடத்திய 5- பேர் கைது.5 டூவீலர்கள், 9- கத்திகள்,4- சேவல்கள் ரூபாய் 11,220 பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மார்ச் 28ஆம் தேதி மதியம் 3:30 மணி அளவில், ஜல்லிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள அம்மாபட்டி பகுதியில் உள்ள முள் தோட்டத்தில் சேவல் சண்டை நடத்துவது தெரியவந்தது. இந்த சேவல் சண்டையில் ஈடுபட்ட கரூர் தாந்தோணி மலை அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்த விஷ்ணு, வெள்ளியணை சமத்துவப்புரத்தைச் சேர்ந்த தனசேகர், சதீஷ், கரூர் அரசு காலனி கருப்பண்ணசாமி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த சிவா என்கிற சிவகுமார் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, இவர்கள் அந்த இடத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தி 5 டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், சேவல் சண்டை நடத்த பயன்படுத்திய 4- சேவல்கள் 9- கத்திகள் மற்றும் ரூபாய் 11,220-ஐ பறிமுதல் செய்தனர். பிறகு 5- பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News