புதுக்கோட்டை ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

அரசு செய்திகள்;

Update: 2025-04-02 04:54 GMT
புதுக்கோட்டை ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
  • whatsapp icon
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏப்ரல் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரல் 7ஆம் தேதி தேர்வுகள் மற்றும் அவசர பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.இந்த உள்ளூர் விடுமுறை 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத் தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News