பிளக்ஸ் பேனரால் தகராறு தந்தை, மகன்கள் மீது தாக்குதல்

குற்றச் செய்திகள்;

Update: 2025-04-02 04:58 GMT
பிளக்ஸ் பேனரால் தகராறு தந்தை, மகன்கள் மீது தாக்குதல்
  • whatsapp icon
ஆலங்குடி : ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாடிமுத்து மகன் அஜித்குமார் (23). இவர், ஆலங்குடி பழைய கோர்ட் முக்கம் கலைஞர் காலனி பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இந்நி லையில், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் தனது அனுமதி இல்லாமல் எப்படி பிளக்ஸ் பேனர் வைக்கலாம் என்று கேட்டு தனது ஆதரவாளர்களு டன் சேர்ந்து அஜித்குமார், அவரது தந்தை நாடி முத்து(50), சகோதரர் பிரசாந்த்(27) ஆகியோரை கட்டையால் தாக்கினார்.இதில் படுகாயமடைந்த 3 பேரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இவர்களில் நாடிமுத்து, பிரசாந்த் ஆகி யோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News