ஜெயங்கொண்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை.ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.;

Update: 2025-10-06 09:51 GMT
அரியலூர், அக்.6- ஜெயங்கொண்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை. எஸ்.ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்கபாளையம், இரவாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கி புதிதாக கட்சியில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்கு புதிதாக கட்சியில் இணைந்த அனைத்து இளைஞர்களும் அயராது பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவைத் தலைவருமான ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், , அதிமுக ஒன்றிய செயலாளர் விக்ரமபாண்டியன், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி துணைச் செயலாளர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன், மாவட்டத் துணைச் செயலாளர் தங்க.பிச்சமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News