மதுரையில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் 500 பேர் கைது.
மதுரையில் நடிகை குஷ்பு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள செல்லத்தம்மன் கோயில் அருகே இன்று (ஜன.3) காலை பாஜக மகளிர் அணி சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு பேரணியை நடிகை குஷ்பு தலைமையில் தொடங்கியது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் போலீசார் குஷ்பு உள்ளிட்ட சுமார் 500 பெண்கள் கைது செய்யப்பட்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆட்டுமந்தை பொட்டல் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். முன்னதாக குஷ்பூ திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேசினார். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பெண் போலீசார் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.