மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 53.26 கோடி நிதி உதவி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 836 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.53,26 கோடி வங்கிக் கடனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் சீர்காழி எம்எல்ஏ பன்னீர் செல்வம் ஆகியோர் பயனாளிகளுக்கு கடன் வழங்கினர்;
தமிழக துணை முதலமைச்சர் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மயிலாடுதுறை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு .பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் வழங்கினர்.