செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 55 பேர் மீட்பு

செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 55 பேர் மீட்பு கொத்தடிமைகளாக பணிபுரிவதாக எழுந்த புகாரை எடுத்து வருவாய்த்துறை நடவடிக்கை;

Update: 2025-03-29 16:50 GMT
  • whatsapp icon
பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 55 பேர் மீட்பு. கொத்தடிமைகளாக பணிபுரிவதாக எழுந்த புகாரை எடுத்து வருவாய்த்துறை நடவடிக்கை திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் செங்கல் சூளையில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. இந்த புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பெருமுடிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த 10 குழந்தைகள் உட்பட 55 வடமாநில தொழிலாளர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுக்கு உணவு வழங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News