தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீர்வு காணப்பட்டது;

Update: 2025-03-08 15:07 GMT
அரியலூர், மார்ச் 8- அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934}க்கு தீர்வு காணப்பட்டது. மேற்கண்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான டி.மலர்வாலண்டினா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இதில் நிலுவையிலுள்ள காசோலை, மோட்டார் வாகன விபத்து, சிவில் என 3,891 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதில் 912 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 5,00,54,934}க்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் 222 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது . அரியலூர் நீதிமன்றம்: அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், குடும்ப நல நீதிபதி செல்வம், கூடுதல் சார்பு நீதிபதி அறிவு ஆகியோர் முதல் அமர்விலும், முதன்மை சார்பு நீதிபதி ரைய்கானா பர்வீன் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். செந்தில்குமார் ஆகியோர் 2 ஆவது அமர்விலும், குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கீதா சேகர் குற்ற வழக்குகளுக்கான அமர்விலும் கலந்து கொண்டு நீண்ட நாள் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன், வழக்குரைஞர் செல்வராஜ், மணிகண்டன், ஹரிபாஸ்கர் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் மனுதாரர்களுக்கு ஆதரவாக ஆஜராகினர். ஜெயங்கொண்டம்: வட்ட சட்டப் பணிகள் குழு தலைவ லதா, சிறப்பு சார்பு நீதிபதி ராஜமகேஸ்வர் மற்றும் நீதித்துறை நடுவர்}1. ஆர். ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனர். செந்துறை: உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ். ஆக்னேஷ் ஜெப கிருபா மற்றும் வழக்குரைஞர் கல்பான ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டு வழக்குகளை விசாரணை மேற்கொண்டனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளுக்கான அமர்வில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.உத்திராபதி மற்றும் என்.முத்துகிருஷ்ணன், எம்.ஜி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் ஊழியர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர். :

Similar News