கோவை: 6 லட்சம் மரங்கள் நடும் திட்டம் – துணை ஆட்சியர் தகவல்
சூலூர் அருகே சமுதாய நலக் கூடம் திறப்பு – கோவையில் 6 லட்சம் மரங்கள் நடும் திட்டம் அறிவிப்பு.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே கரவழி மாதாப்பூரில், தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நலக் காலனிக்கான சமுதாய நலக் கூடத்தை, துணை மாவட்ட ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் தனியார் நிறுவனம் சார்பில் விஜயக்குமார், செந்தில், அக்ஷய ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை மாவட்ட ஆட்சியர், மழை பாதிப்பைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் முழு விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கோவை மாநகரில் 6 இலட்சம் மரங்கள் நடும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.