நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எம் ஆர் சி ராணுவ மையம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது...

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு உற்சாகம்;

Update: 2025-08-15 13:58 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எம் ஆர் சி ராணுவ மையம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது....... நாடு முழுவதும் இன்று 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் எம் ஆர் சி ராணுவ முகாம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம் ஆர் சி கமாண்டட் கிரிஷ் நேந்து தாஸ்,போர் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இதனைத் தொடர்ந்து எம் ஆர் சி ராணுவ முகாமில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அக்னி பாத் வீரர்கள் ராணுவத்தினர் கலந்து சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர்.

Similar News