ஆம்பூரில் நகைகடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சி செய்த தாய்மாமன் மற்றும் அவரது மகன் உட்பட 8 பேர் கைது
ஆம்பூரில் நகைகடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சி செய்த தாய்மாமன் மற்றும் அவரது மகன் உட்பட 8 பேர் கைது;

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகைகடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சி செய்த தாய்மாமன் மற்றும் அவரது மகன் உட்பட 8 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் இவர் ஆம்பூர் நகை கடை பஜாரில் நகைகடை நடத்தி வரும் நிலையில், அருண்குமார் கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு நகைகடையை பூட்டி விட்டு வீட்டிற்கு திரும்பிய போது, சோலூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே இருட்டில் மறைந்திருந்த நபர்கள் அருண்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர், உடனடியாக அதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அருண்குமாரை மீட்டு சிகிச்சையிற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், அருண்குமாரை வெட்டியது தொடர்பாக அவரது தாய்மாமாவான விஜயகுமார் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அதன் படி, அருண்குமார் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமாரின் பூர்விக சொத்தை அருண்குமார் வாங்கியதாகவும், இதுதொடர்பாக குடும்ப பிரச்சனை இருந்து வந்த நிலையில், அருண்குமாரை கடந்த 26 ஆம் தேதி ரயில்வே மேம்பாலம் அருகே கொலை செய்யதிட்டமிட்டு, 26 ஆம் தேதி இரவு ரயில்வே மேம்பாலம் அருகே அருண்குமார் வந்த போது, மறைந்திருந்த கூலிப்படையினர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அருண்குமாரின் தாய் மாமாவான விஜயகுமார் மற்றும் அவரது மகன் வெங்கடேசன், மற்றும் கூலிப்படையை சேர்ந்த முகமது அலி, திருப்பதி, ஆகாஷ், பார்த்திபன், சந்துரு, ஜெகன், ஆகிய 8 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, அவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள் ,மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.