காங்கேயத்தில் எதிர்வரும் 9ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
காங்கேயத்தில் 9ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகின்றது;
காங்கேயத்தில் 9ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காங்கேயம் மின்வாரிய கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமைகளில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஜனவரி மாதத்திற்கான கூட்டம் முதல் புதன்கிழமை அரசு விடுமுறை நாள் என்பதால் நடைபெறவில்லை. அதனால் 9ம் தேதி 11மணி முதல் மதியம் 1மணி வரை சென்னிமலை ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய எஸ்.இ தலைமையில் நடைபெற உள்ளது. அதுசமயம் மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் விமலாதேவி தெரிவித்துள்ளார்.