பரமத்தி வேலுார் பகவதி அம்மனுக்கு 9 ஆண்டு கும்பாபிஷேக விழா.

பரமத்தி வேலுார் பகவதி அம்மனுக்கு 9 ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;

Update: 2025-01-31 16:10 GMT
பரமத்திவேலுார், ஜன. 31– பரமத்தி வேலுார் சுல்தான்பேட்டையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் விநாயகர். முருகன். பகவதி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை உற்சவமூர்த்திகளுக்கு ப்ராண பிரதிஷ்டை, 9 ம்ஆண்டு கும்பாபிஷேகம் விழா நடத்த எட்டுப்பட்டி தர்மகர்த்தாக்கள் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். 9 ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, மகா சங்கல்பம் தொடர்ந்து கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது. பகவதி அம்மன் விநாயகர் பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு 21 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாதாரணை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.

Similar News