ஜெயங்கொண்டத்தில் ஹைடெக் மெக்கானிக் குரூப் சார்பாக BS6 பயிற்சி முகாம்
ஜெயங்கொண்டத்தில் ஹைடெக் மெக்கானிக் குரூப் சார்பாக பி.எஸ்.சி சிக்ஸ் பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட மெக்கானிக்கல் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். .;
அரியலூர், செப்.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் ஹைடெக் மெக்கானிக் குரூப் சார்பாக BS6 பயிற்சி முகாம் மெக்கானிக் ராஜவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெக்கானிக் துரை முன்னிலை வகித்தார், முகாமில் ஜெயங்கொண்டம் தா.பழூர், ஆண்டிமடம், குறுக்கு ரோடு, கங்கைகொண்ட சோழபுரம், உடையார்பாளையம்,தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட டூ வீலர் மெக்கானிக்குகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் இரண்டு சக்கர வாகனங்களில் சென்சார், இசியு ,ஆக்சிலேட்டர், ஓபிடி டூல் பொருத்துவது பற்றியும் விரிவான பயிற்சியினை டூ வீலர் மெக்கானிகளுக்கு பயிற்சியாளர் ஹரிஷ் கலந்து கொண்டு விளக்கி பேசினார். முடிவில் மெக்கானிக் மணி நன்றி கூறினார்.